மத்தியப் பிரதேசத்தில் ஐந்து காவல் நிலையங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி விழாக்களில் கலந்துகொண்டு வழிபாட்டு தலங்களில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் அனைவரும் மியான்மர், இந்தோனேசியா, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 (அரசு அலுவலரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்), 269 (சட்டவிரோதமான அல்லது அலட்சியமான செயலால் மக்களின் உயிருக்கு ஆபத்தான நோயை பரப்புதல்) மற்றும் 270 (நோய்த்தொற்று பரவக்கூடிய அபாயகரமான செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மாவட்டம் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கோவிட்-19 சமூகப் பரவல் இல்லை'- மத்திய சுகாதாரத் துறை தகவல்