ETV Bharat / bharat

வெட்டுக்கிளி கூட்டத்தை எதிர்த்து போராடும் மத்தியப் பிரதேசம் - தமிழ் செய்திகள்

போபால்: மல்ஹர்கர் பகுதியில் கூட்டம் கூட்டமாக வந்த வெட்டுக்கிளிகளை பூச்சிக்கொல்லி மருந்தை வைத்து 60 விழுக்காடு அழித்தனர்.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம்
author img

By

Published : May 25, 2020, 11:19 AM IST

மத்தியப் பிரதேசத்தின் மாண்டசார் மாவட்டத்தில் மல்ஹர்கர் என்ற பகுதியில் நேற்று( மே 24) வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்து வந்தன. இதனை மத்திய வெட்டுக்கிளி குழு, வேளாண் அறிவியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதல் பயிற்சியாக பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து 60 விழுக்காடு அகற்றினார்கள் என்று மாண்டசார் மாவட்ட நீதிபதி மனோஜ் புஷ்ப் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக பல துறைகள் தங்களின் ஆலோசனையை கூறிவருகின்றனர்.

அதன்படி உத்தரப் பிரேதச வேளாண்மைத் துறை இதுகுறித்து கூறுகையில் ராஜஸ்தான், ’மத்தியப் பிரதேசம், பஞ்சாப்,ஹரியானா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வெட்டுக்கிளிகள் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அதிக ஒலி எழுப்பும் டிரம்ஸ், தட்டுகளை அடித்தல் மூலம் விவசாயிகள் விரட்டலாம்’ என கூறியுள்ளது.

மேலும், சுற்றுச்சூழல், வன, காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,” விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர்கள், சக்திவாய்ந்த தெளிப்பான்கள் கொண்டு பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான ரசாயனங்களை தெளித்து விரட்ட முடியும். எப்போதும் ஜூன், ஜூலை மாதங்களில் வருகின்ற வெட்டுக்கிளிக் கூட்டம் தற்போது நடப்பு ஆண்டில் முன்னதாகவே இந்தியாவிற்குள் வந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஷ வாயு கசிவு விவகாரம்: எல்ஜி பாலிமர்ஸ் ஆலையை மூடுவதற்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.