ETV Bharat / bharat

புனே டூ ஹைதராபாத் : ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட நுரையீரல்!

author img

By

Published : Aug 17, 2020, 5:54 PM IST

புனேவில் மூளை சாவு ஏற்பட்ட ஒருவரின் நுரையீரல், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவருக்காக எடுத்து வரப்பட்டு பொருத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lungs for transplant
Lungs for transplant

கே.ஐ.எம்.எஸ் இதய மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை மையத்தில் தீவிர நுரையீரல் நோயால் அவதிப்பட்டுவந்த ஒருவருக்கு, ஜீவாந்தன் என்ற உடல் உறுப்பு தானம் திட்டத்தின் கீழ் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், புனே தனியார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, புனேவின் மண்டல உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம் ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவருக்கு அவரது நுரையீரலைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தெலங்கானா ஜீவாந்தம் திட்டத்தின் பொறுப்பாளர் டாக்டர் சுவர்ணலதா, புனேவின் மண்டல உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி கோகலேவிடம் கலந்தாலோசித்தார். அதனைத் தொடர்ந்து தடைகளில்லாமல் 560கி.மீ அந்த நுரையீரலைக் கொண்டு வரத் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, போக்குவரத்து அலுவலர்கள், விமான நிலையத்தின் அலுவலர்கள் என அனைவரிடமும் முறையாகக் கலந்தாலோசித்து, புனேவிலிருந்து ஹைதராபாத்துக்கு நுரையீரலை பாதுகாப்பாகக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எப்படி சாத்தியமானது?

வாகனம் மூலமாக புனே விமான நிலைத்திற்கு எடுத்து வரப்பட்ட நுரையீரல், விமானம் மூலமாக ஹைதராபாத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதைப் போலவே, விமான நிலையத்திலிருந்து கே.ஐ.எம்.எஸ் இதய மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை மையத்திற்கு நுரையீரலை கொண்டு வரும் வரை போக்குவரத்து நெருக்கடியில்லாத க்ரின் காரிடரை ஹைதராபாத் போக்குவரத்துத் துறை அமைத்துக் கொடுத்தது.

இப்படியாக மருத்துவர்கள், போக்குவரத்து அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியால்தான் ஒரு மணி நேரத்தில் 560 கி.மீ அப்பால் இருந்து ஹைதராபாத்தில் உள்ள நபருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கொண்டு வரும் முயற்சி சாத்தியமாகியது.

இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சாதித்துக்காட்டிய இந்திய வம்சாவளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.