கரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் முழு உஷார் நிலையில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த பாலிவுட் பாடகி கனிகா கபூரை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் நரேந்திர் அகர்வால் கூறுகையில், "கனிகா கபூர் தாஜ் உணவு விடுதியில் தங்கிருந்த போது அவருடன் பேசிய 11 விடுதி ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், கனிகா கபூர் அறையில் தங்கிருந்த மும்பையைச் சேர்ந்த ஓஜாஸ் தேசாயை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.அவரின் முகவரியை தீவிரமாக தேடி வருகிறோம். தற்போது, தாஜ் உணவகவிடுதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இதுவரை கனிகாவுடன் தொடர்பிலிருந்த 260 நபர்களை கண்டுபிடித்து பரிசோதனை செய்துள்ளோம் என்றார்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்புக்கு பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை கைவிரித்த இம்ரான் கான்