ETV Bharat / bharat

'காதல் என்பது தனிப்பட்ட விருப்பம்.. காதலும் ஜிகாத்தும் கைக்கோக்க வேண்டாம்'

நடிகராக இருந்து அரசியல்வாதியாக பரிணமித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி நுஸ்ரத் ஜஹான், காதலும், ஜிகாத்தும் கைக்கோக்க வேண்டாம் எனவும் காதல் என்பது தனிப்பட்ட விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

Nusrat Jahan on love jihad
'காதல் என்பது தனிப்பட்ட விருப்பம்..காதலும் ஜிகாத்தும் கைகோர்க்க வேண்டாம்'
author img

By

Published : Nov 23, 2020, 9:27 PM IST

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி நுஸ்ரத் ஜஹான், காதலும் ஜிகாத்தும் கைக்கோக்க வேண்டாம் என்றும் தேர்தலுக்கு முன்பு சிலர் இதுபோன்ற தலைப்புகளின்கீழ் வருகிறார்கள் என்றும் விமர்சித்திருக்கிறார்.

"நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் அவர்களை காதலியுங்கள். காதல் தனிப்பட்ட விருப்பம். மதத்தை ஒரு அரசியல் கருவியாக மாற்றாதீர்கள்" என நுஸ்ரத் ஜஹான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நுஸ்ரத் ஜஹான், கடந்தாண்டு வேற்று மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில், லவ் ஜிகாத், வலுக்கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்போவதாகத் தெரிவித்திருந்தார். முன்னதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் இதே கருத்தை கூறியிருந்தார். கர்நாடாக அரசு லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டத்தை வகுத்துள்ளது.

மத்திய உள் துறை அமைச்சகம், இந்தாண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, லவ் ஜிகாத் என்ற சொல் தற்போதுள்ள சட்டங்களில் வரையறுக்கப்படவில்லை என்றும் இதுபோன்ற வழக்கு எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்திருந்தது.

இதையும் படிங்க: திருமணத்திற்காக மதம் மாறுவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் - அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.