ETV Bharat / bharat

நொய்டாவில் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்!

நொய்டா: மதுபானக் கடைகள் திறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே நொய்டாவில் மது பிரியர்கள் கடைகளில் முகாமிட்டுள்ளனர்.

Long queues outside liquor shops in Noida

author img

By

Published : May 5, 2020, 3:02 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது பச்சை மற்றும் மஞ்சள் பகுதிகளிலுள்ள மதுக்கடைகளைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

அதன்படி நொய்டாவின் கவுதம் புத்தா நகரில் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே மதுக்கடையில் குவியத் தொடங்கினர். மாவட்ட நீதிபதி எல்.ஒய். சுஹாஸின் உத்தரவுப்படி நொய்டா பகுதியில் காலை 10 மணி முதல் 7 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது நொய்டா பகுதியில் 391 மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 97 மதுபான கடைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருப்பதால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.

முன்னதாக மதுபான கடைகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டன. இருப்பினும் காலை 8 மணி முதலே மது பிரியர்கள் குவியத் தொடங்கியதால் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் மதுக்கடைகளில் தகுந்த இடைவெளி முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்றும் ஒரு சாரார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: போதைக்காக நெயில் பாலிஷ் ரிமூவர் லோஷன் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.