கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுக்க 21 நாள்கள் மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் ஒன்றுக்கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது.
விஜயவாடாவிலுள்ள பல சந்தைகளில் அதிகாலையிலேயே மக்கள் திரண்டிருந்தனர். இது போன்ற காட்சிகள் அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியிருந்தன.
உகாதி திருநாளில் வாழைப்பழங்கள், வெல்லம், வேப்பம் பூ, கரும்பு, தேங்காய், சர்க்கரை மற்றும் மாங்கனி உள்ளிட்டவைகளை இறைவனுக்கு படைத்து வணங்குவார்கள்.
ஆகவே இந்த காய்கறி மற்றும் பழங்களை வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் விதிக்கப்பட்டிருந்த கெடுபிடிகள் குறித்து தில்சுக்நகரில் வசிக்கும் இளம்பெண் திவ்யா வருந்தினார். எனினும் மக்கள் நலன் சார்ந்து இவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தெலங்கானாவில் மக்கள் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தற்போது வரை, ஆந்திராவில் எட்டு பேருக்கும், தெலங்கானாவில் 37 பேருக்கும் கரோனா அறிகுறிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவை துல்லியமாக கண்டறியும் கருவி விரைவில் அறிமுகம்!