ETV Bharat / bharat

தேர்தலில் போட்டியிட எல்ஜேபி கட்சிக்கு தாவிய பிரமுகர்கள்!

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிக்கு தாவியுள்ளனர்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்
author img

By

Published : Oct 9, 2020, 12:58 AM IST

பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாள்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக ஜனசக்தி பரிஷத் கட்சி போட்டியிட முடிவெடுத்துள்ளது.

இருப்பினும் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக, ரமேஷ் சவுராசியா, உஷா வித்யார்த்தி, ராஜேந்திர சிங் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி லோக் ஜனசக்தி பரிஷத் கட்சியில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி, பாஜகவைச் சேர்ந்த ராம் சஞ்சீவன் சிங், தேவேஷ் சர்மா, ராமவத்தார் சிங், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.எஸ் சிங், கபில் தேவ் சிங் ஆகியோரும் லோக் ஜனசக்தி பரிஷத் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை முன்பு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.