நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொடரும்” என்றார்.
மேலும் அத்திட்டம் கோரிக்கையின் அடிப்படையில் தொடர்வதாகவும், இக்கோரிக்கை இடத்துக்கு இடம் வேறுபடுகிறது எனவும் கூறினார்.
இந்நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் பெங்களுருவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அந்த 11 வரி விலக்கு திட்டங்களின் பட்டியலை நாங்கள் முழுமையாக வெளியிட்டுள்ளோம்” என்றார்.