கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு சில தளர்வுகளுக்கு அனுமதியளித்தைத் தொடர்ந்து, ராஜாஸ்தான் அரசு பச்சை, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று மண்டலங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது.
இருப்பினும் மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர்.
இதையடுத்து, ராஜாஸ்தான் அரசு மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கூப்பன் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினர். இதன்மூலம் கூப்பன்கள் வழங்கிய நேரத்தின் அடிப்படையில் மக்களுக்கு மதுபானம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை...!