ETV Bharat / bharat

இந்தியாவில் 29 விழுக்காடு சரிந்த மதுபான விற்பனை - மதுபான விற்பனை

டெல்லி: வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை 29 விழுக்காடு குறைந்துள்ளதாக இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஏபிசி) தகவல் தெரிவித்துள்ளது.

liquor sales
liquor sales
author img

By

Published : Nov 9, 2020, 4:26 PM IST

இந்தியாவில் ஆண்டுதோறும் மதுபான விற்பனை அதிகரித்துவரும் நிலையில் 2019-20 நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் 6 மாத காலகட்டத்தில் கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட மதுபான விற்பனை தடை, மதுபானம் மீது போடப்பட்ட 50 விழுக்காடு கரோனா வரி, ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் மதுபான விற்பனை 29 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக ஆந்திரா, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் மதுபானம் மீது விதிக்கப்பட்ட அதிகப்படியான வரி காரணமாகக் கடுமையான சரிவை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மதுபான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திரா (51 விழுக்காடு), சத்தீஸ்கர் (40 விழுக்காடு), மேற்கு வங்கம் (22 விழுக்காடு), ராஜஸ்தான் (20 விழுக்காடு) சரிந்துள்ளது. இந்த மாநிலங்களில், விற்பனை கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்தது. மேலும் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை மது விற்பனை 39 விழுக்காடு சரிந்துள்ளது.

இது குறித்து இந்திய மதுபான நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைமை இயக்குநர் வினோத் கிரி கூறுகையில், "மதுபான மீதான கரோனா வரியை நியாயமான விலைக்குக் குறைக்குமாறு மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுபான விற்பனை குறைந்து வருவதால் அரசாங்கத்தின் வரி வசூல் பாதிக்கப்படலாம் வாய்ப்பு உள்ளது.

கரோனா வரி அதிகரிப்பு காரணமாக சில மாநில அரசுகள் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்து விலையை உயர்த்தினர் ஆனால் இதுவே மதுபான சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்திய மதுபான துறையின் பொறுப்பான பிரதிநிதியாக, இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஏபிசி) பல்வேறு அரசாங்கத்துடன் தரவைச் சேகரித்து பகிரப்படும். இதன் மூலம் பங்குதாரர்களின் நலனுக்காகச் செயல்படும் ஒரு ஒழுங்குமுறை கொள்கை கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுகிறது' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.