பீகார் மாநிலம், சாப்ரா பகுதியில் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி, ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவமானது தியாரா என்னும் பகுதியில் உள்ளூர்வாசிகள் நிலத்தை அளவிடுவதற்காகச் சென்றபோது நடைபெற்றுள்ளது. அந்நேரத்தில் காற்று வேகமாக அடித்ததால் உள்ளூர்வாசிகள் குடிசைப்பகுதி ஒன்றில் தஞ்சமடைந்தனர். ஆனால், கனமழையில் அது சேதாரமானதைத் தொடர்ந்து பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்தோரை சாப்ரா சாதர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய அலுவலர் ஒருவர், 'பலத்த இடி மின்னல் வந்ததால், அப்பகுதி பீதி அடைந்துள்ளது. இறந்த உடல்களை நாங்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... திண்டுக்கல்லில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!