ETV Bharat / bharat

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சவால்- கிரண்பேடி - புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்

புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சவால் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

kiren bedi
கிரண்பேடி
author img

By

Published : Jan 4, 2020, 4:54 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இன்று செய்தியாளரை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 2020ஆம் ஆண்டில் புதுச்சேரியில் கொடுக்கப்பட்டுள்ள சவால்கள் என்னவென்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி கீழ்மட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். கிராம ராஜ்ஜியம் அடிப்படையில் ஜனநாயக உரிமை கிராமங்களில் வாழக்கூடிய மக்களுடைய பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட வேண்டும். நமது மாநிலத்தில் 2011ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை அதை நடத்துவது நமது அரசாங்கத்தின் முதல் சவால்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வெகுவிரைவிலேயே அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசு சமீபத்தில் புதுச்சேரி அரசுக்கு அளித்துள்ள உத்தரவும். வெளிப்படையான முறையில் மாநிலத்தின் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

குப்பைகள், கழிவு நீரை மறுசுழற்சி செய்து அவற்றை மீண்டும் உபயோகித்தல். விவசாயத்தில் நீர் சேமிப்பு முறைகளை கொண்டு வருதல், பள்ளிகளில் தாய்மொழி மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைத்தல் மேலும் உயர் கல்வியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புதல் பணிகளில் உள்ள தேக்க நிலையை கலைந்து தேவையான நேரடி நியமனங்கள் செய்தல் மற்றும் பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றின் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவது பெருகிவரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நமது வருவாயைப் பெருக்குதல். ஜிஎஸ்டி, கேபிள்டிவி வரி, கழிவுநீர் இணைப்பு ஆகியவற்றில் வருவாயை மேம்படுத்துதல் இதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதியில் உள்ள நிலுவைத் தொகையை அளிக்க இது உதவும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மக்கள் தலைக்கவசம் அணிவதையும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக பின்பற்றுவதும் உறுதிப்படுத்த மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்த வேண்டும்.

கிரண்பேடி பேட்டி

இதையும் படியுங்க: 'தரக்குறைவாக பேசுவது கண்ணியமில்லை' - நாராயணசாமிக்கு கிரண்பேடி கடிதம்!

Intro:புதுச்சேரி வரும் 2020 ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தி கீழ்மட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் அரசுக்கு சவாலாக சந்திக்க உள்ளோம் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்

Body:புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவரது மாளிகையில் இன்று செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர் 2020ம் ஆண்டு புது வருடத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள சவால்கள் என்னவென்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி கீழ்மட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது என்றும கிராம ராஜ்ஜியம் அடிப்படையில் ஜனநாயக உரிமை கிராமங்களில் வாழக்கூடிய மக்களுடைய பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட வேண்டும். கிராமத்தில் செய்ய வேண்டிய கடமைகளை அங்கே செய்வதற்கான உறுதியை கொடுப்பது ஜனநாயக முறையில் நடத்தக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் ஆகும் .நமது மாநிலத்தில் 2011ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை அதை நடத்துவது நமது அரசாங்கத்தின் முதல் சவால் என்றார்

ஆகவே நமது அரசாங்கம் முதல் சவாலை , வரக்கூடிய ஆண்டில் எந்தெந்த தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வெகுவிரைவிலேயே அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசாங்கம் சமீபத்தில் புதுச்சேரி அரசுக்கு ஒரு உத்தரவிட்டுள்ளது வெளிப்படையான முறையில் மாநிலத்தின் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளது அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றார்

குப்பைகள் மற்றும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து அவற்றை மீண்டும் உபயோகித்தல். விவசாயத்தில் நீர் சேமிப்பு முறைகளை கொண்டு வருதல், பள்ளிகளில் தாய்மொழி மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைத்தல் மேலும் உயர் கல்வியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புதல் பணிகளில் உள்ள தேக்க நிலையை கலைந்து தேவையான நேரடி நியமனங்கள் செய்தல் மற்றும் பதவிஉயர்வு அளித்தல் ஆகியவற்றின் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவது பெருகிவரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நமது வருவாயைப் பெருக்குதல் ஜிஎஸ்டி ,கேபிள்டிவி வரி மற்றும் கழிவுநீர் இணைப்பு ஆகியவற்றில் வருவாயை மேம்படுத்துதல் இதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நிலுவைத் தொகையை அளிக்க இது உதவும் என்றார்

மேலும் பேசிய அவர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மக்கள் தலைக்கவசம் அணிவதையும் மற்றும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக பின்பற்றுவதும் உறுதிப்படுத்த மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்

Conclusion:புதுச்சேரி வரும் 2020 ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தி கீழ்மட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் அரசுக்கு சவாலாக சந்திக்க உள்ளோம் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.