தென் கொரியாவின் டெக் ஜெயண்டான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களின் ஜி8எக்ஸ் தின்க்யூ (G8X ThinQ) என்னும் டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்ஃபோனின் புதிய மாடலை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் அசத்தலான இந்த டூயல் டிஸ்ப்ளேவில் ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேஷன்களை (application) பயன்படுத்த முடியும், இதன் மூலம் இந்த போனில் மல்டி டாஸ்கிங் செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
டூயல் டிஸ்ப்ளேவை பயன்படுத்தும்போது மினி லாப்டாப் பயன்படுத்தும் அனுபத்தை இது கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
போன் ஆடியோ
போனில் 32 பிட் ஹை ஃபை க்வாட் டெக் மெரிடியன் ஆடியோ டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாட்டு கேட்கும்போது ஒலி தெள்ளத்தெளிவாக இருக்கும். மேலும் இந்த ஃபோன் வாட்டர் ஃப்ரூப் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போன் முக்கிய ஃபீச்சர்ஸ்
- ராம்: 6ஜீபி
- போன் ஸ்டோரெஜ்: 128
- பேட்டரி: 4,000 எம்ஏஹெச்
- முன் செல்ஃபி கேமரா: 32 எம்பி
- பின் கேமரா: 13 எம்பி வைட் கேமரா
- சிம் கெப்பாசிட்டி : 2 நானோ சிம்கள் (அதில் ஒன்று ஹைபிரிட்)
- ஸ்கிரீன் ரெசல்யூஷன்: 1080 x 2340 பிக்சல்ஸ் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
- சிப்ஸெட் - குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 பிராசஸர்
- உயரம்: 159.3 எம்எம்
- எடை : 192 கிராம்
- அகலம்: 75.8 எம்எம்
- தடிமன்: 8.4 எம்எம்
- டிஸ்ப்ளே: 6.4 இன்ச்
- நெட்வர்க்: 4ஜி, 3ஜி
இதையும் படியுங்க: அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் இன்று முதல் ஆரம்பம்! - அதிரடி சலுகை