புவி வெப்பமயமாதலின் விளைவாக உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்னைகள் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்துவருகிறது. இந்தச்சூழலில், சுற்றுச்சூழலை பாதுகாக்க பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறை படுத்துவதற்காக இந்திய பட்ஜெட்டில் நான்காயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு எடுத்து வைத்துள்ள முதல் அடி இதுவாகும். அதன் பொறுப்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் புவி வெப்பமயமாதல் துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் அதனைக் கட்டுப்படுத்தவும், தரமான காற்று கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் தேசிய அளவில் தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படவுள்ளன. அதன்படி, தேசிய பசுமை திட்டத்துக்கு ரூ. 311 கோடி, நாடு முழுவதும் காடு வளர்ப்புத் திட்டத்துக்காக ரூ. 246 கோடி, சுற்றுச்சூழல் மாசை அளவீடுவதற்காக ரூ. 460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் வனத்தீ ஏற்படுதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Greenpeace South Asia என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் மட்டும் காற்றுமாசு பாதிப்பால் மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர் என்பதும் பெட்ரோல், டீசல் வாகனங்களினால் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஆண்டுக்கு 9.80 லட்ச குழந்தைகள் முன் கூட்டியே பிறக்கின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. நாட்டில் 8 பேரில் ஒருவர் காற்று மாசு காரணமாக இறக்கிறார்.
குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் உலகிலேயே மிக அதிக பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். இதன்மூலம் நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். காற்று மாசு காரணமாக ஏற்படும் இழப்பீடு நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதத்துக்கு சமம் ஆகும்.
தற்போதைய மற்றும் கடந்த கால அரசுகள் பருவநிலை, சுற்றுச்சூழல் பாதிப்புகளில் போதிய அக்கறை காட்டவில்லை. அதன் தீவிரத்தன்மையை சரியாக புரிந்து கொள்ளவில்லை. வர்த்தக தொழிலில், அரசியலில் காட்டும் அக்கறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் காட்டப்படவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.
தற்போது பருவநிலை மாற்றம் பரவலாக இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கத்தொடங்கியுள்ளது. இடியுன் கூடிய மழை, திடீர் வெள்ளம், பஞ்சம், பருவம் தப்பி மழை பெய்வது இதுவெல்லாம் பருவநிலை மாற்றத்துக்கான சான்று. மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டுமென்றால் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவற்காக நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கத்துடன் பாரிஸ் ஒப்பந்தத்தின்படி போடப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்த இந்திய அரசு திட்டங்களை வகுத்து முன்னேறி வருகிறது. அதன்படி, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றும் அனல்மின் நிலையங்கள், தற்போதைய தர நிர்ணய கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லையென்றால் அவற்றை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
நாட்டில் 70 விழுக்காடு மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளாண் துறையில் பிரதமரின் குசும் யோஜனா திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் திட்டம் ஊக்குவிக்கப்படும். நாடு முழுவதும் 35 லட்சம் சூரிய ஒளியில் இயங்கும் பம்புகள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பயனற்ற தரிசு நிலங்களில், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சாரத்தை பொது விநியோகத்துடன் இணைக்கவும் ஊக்குவிக்கப்பட்டால், கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
அதிகரித்து வரும் காற்று மாசுவை தடுக்க நிதி ஆயோக் வகுத்துள்ள விரிவான திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும். காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் எதுவென 180 நாடுகளில் அடங்கிய பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது கவலைக்குரியது. மற்றொரு ஆய்வின்படி உலகில் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்படைந்த 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. வாகனங்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு காரணமாக உடல் நலக் கோளாறுகள் மக்களிடையே ஏற்படுகின்றன.
அதில் ஆண்டுக்கு 3.5 லட்சம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் பெரியவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், தாக்குவதம் அதிகரித்துள்ளது. காற்று மாசுதான் இதற்கு முக்கிய காரணி ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ள புவி வெப்பமயமாதல் காரணமாக நாடுகளிடையே செல்வ சமநிலையையும் அதிகரித்துள்ளது. செல்வமிகுந்த நாடுகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வர வளர்ந்து வரும் நாடுகள், ஏழை நாடுகள் தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ளன.
பிரிட்டன், நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் காலநிலை அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளன. பிரிட்டனில் 53 விழுக்காடு, நியூசிலாந்த் 49 விழுக்காடு, கனடாவில் 32 விழுக்காடு வசிக்கும் பகுதிகள், காற்று மாசு காரணமாக மக்கள் வசிக்கவே முடியாத பகுதிகளாகி விட்டன. இந்த நாடுளை போல கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதை தடுக்கவும் காற்று மாசு ஏற்படுவதை தடுக்கவும் எடுக்கும் முயற்சிகளை உலக நாடுகள் பின்பற்றுவது அவசியம்.
ஆட்டோமொபைல் துறையில் காற்று மாசு ஏற்படுத்தும் பெட்ரோலிய எரிபொருள்களை தவிர்த்து சூரிய சக்தி, மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களான ஷாங்காய்., பெர்லின், லண்டன், பாரீஸ், மாட்ரிட், சியோல் போன்ற நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்துத் திட்டத்துக்கு நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இத்தகைய திட்டத்தால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நகரங்ளில் எடுக்கப்பட்ட முயற்சிகளை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் அவசியத்தை உணர வைத்தால்தான் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தகுந்த பலன் கிடைக்கும். அழிந்து வரும் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனும் தன் பங்களிப்பை வழங்க வேண்டும்.
அதிகப்படியாக வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு குறைக்காவிட்டால் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்கு அழிவை சந்திக்கும் நிலை ஏற்படும். அதனால், இயற்கையையும் சுற்றுப்புறத்தயும் பாதுகாப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து மக்களும் அரசுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் தொகை பெருக்கத் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால் மட்டுமே சுற்றுப்புறச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா பசுமை இந்தியாவாக மாற முடியும்.
இதையும் படிங்க: "2030ஆம் ஆண்டுக்குள் புவிவெப்பமயமாதலை தடுக்காவிடில் 3.5 கோடி மக்கள் வேலையிழப்பர்"