ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் சுட்டதற்கு எதிர்த் தாக்குதலுக்காக தாங்கள் சுட்டதாகவும், மேலும் சில தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் பாதுகாப்புப் படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர், சிஆர்பிஎஃப் அலுவலர்கள் ஆகியோர் இணைந்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இறந்த தீவிரவாதியின் உடல் பாதுகாப்பு அலுவலர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தீவிரவாதியின் பெயர் உஃபைத் ஃபரூக் என்றும், இவர் பல நாட்களாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நபரென்றும் தெரியவந்தது. மேலும், பல இளைஞர்களைத் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க அவர் முயன்று வந்ததாகவும் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
ஹரியானா அரசியலில் புதிய திருப்பம் - காங்கிரஸில் இணைந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்