ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது - ஜம்மு காஷ்மீர் செய்திகள்
ஸ்ரீநகர்: லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர்களை அங்குள்ள காவல் துறையினர் இன்று (ஆகஸ்ட் 8) கைது செய்தனர். ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், முதாசிர் பரூக் பட், தவுக்கில் பட், ஆசிப் பட், காலித் லதீப் பட், காசி இக்பால், தாரிக் ஹூசைன் ஆகிய ஆறு பேரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் ஐஜி முகேஷ் சிங் செய்தியாளர்களிடம் பேசிகையில், ”ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டுவருவதாக தகவல் கிடைத்தது. அவர்கள் நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவர் மீதும் உபா உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் ஹவாலா முறையில் சுமார் 12.5 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மூச்சுத் திணறல்; மருத்துவமனையில் அனுமதி