அமேசானில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்
அவசர அமேசான் வன நிதி என்ற பெயரில், எர்த் அலையன்ஸ் அமைப்பு நிதி திரட்டிவருகிறது .
இது குறித்து எர்த் அலையன்ஸ்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் "தீ விபத்துக்கு எதிராக அமேசானின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பணியாற்றும் பழங்குடி சமூகங்கள் மற்றும் பிற உள்ளூர் மக்களுக்காக அவசர அமேசான் வன நிதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அமைப்புக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 5 மில்லியன் டாலரை நிதியாக வழங்கியுள்ளார்.