கரோனா நெருக்கடிக்கு இடையே சோனம் நர்பூ நினைவு மருத்துவமனையில் இன்று (ஜூன் 17) ஒரு அசாதாரண சூழல் நிலவியது. ஆம், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினரால் தாக்கப்பட்டு வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டன. 14ஆவது படைப் பிரிவான லே தலைமையகத்திலிருந்து அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், இறந்த உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
எஸ்.என்.எம் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், இம்மருத்துவமனையில் இந்திய ராணுவ வீரர்கள் ஆறு பேரின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன என்றும், காயமடைந்தவர்கள் யாரும் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
சீன விவகாரம்: அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ராகுல்
இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே, கல்வான் பகுதியில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் மோதல் ஏற்பட்டது. அதில் இந்திய ராணுவ அலுவலர் ஒருவர் உள்பட மூன்று பேர் உயிரிழந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில் மேலும் 17 இந்திய ராணுவ வீரர்கள், மிகவும் உயரமான பகுதியில் குறைவான வெப்பநிலை கொண்ட இடத்தில் காயமுற்று வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவத் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்தத் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர் என்ற உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது.
மே மாத தொடக்கத்தில், சீன ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளை வரம்பு மீறி ஆக்கிரமித்தால் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் நிலவி வந்தது.
'சீனாவின் அத்துமீறலால்தான் வன்முறை வெடித்தது!'
லடாக்கின் செல்வாக்கு மிக்க மதக் குழுவான லடாக் புத்த சங்கத்தின் (எல்.பி.ஏ) உறுப்பினர்கள் குழு ஒன்று கூடி கொல்லப்பட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சவப்பெட்டிகளில் வைக்க 'கட்டக்' என்று அழைக்கப்படும் வெள்ளை நிற சட்டைகளை எடுத்துச் சென்றனர்.
எல்.பி.ஏ.யின் தலைவர் பி.டி.குன்சாண்ட், ஈ.டி.வி பாரத்திடம் தெரிவிக்கையில், எல்லை தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இங்கு கூடியிருக்கிறோம். லடாக் மக்கள் எந்த கடினமான சூழ்நிலைகளிலும் இந்திய ராணுவத்தை ஆதரித்து வருவதாகவும், சீனாவின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.
"நமது ராணுவத்தின் மனவுறுதியை வலுப்படுத்த இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
'அப்பா மாறி நானும் மிலிட்ரி ஆபிசர் ஆக போறேன்' - உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மகன்
சீனா ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய அரசு மேம்பட்ட சிந்தனைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் பின்னோக்கி நகர வாய்ப்பு இல்லை என்றும் சீனப் படைகள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் எதுவாக இருந்தாலும் உடனே அவ்விடங்களை அவர்கள் காலி செய்வது நல்லது என்று லே மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செரிங் நம்கியல் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "சீன ராணுவத்தினருக்கு அமைதியின் மொழி புரியவில்லை என்றால் இந்திய ராணுவம் மூலம் தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இந்த நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் தெரிவிக்க வேண்டும். சீன படைகள் ஆக்கிரமித்துள்ள எல்லைப் பகுதிகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான பகுதிகளாகும்" என்று கூறினார்.