ETV Bharat / bharat

மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் போராட்டம்! - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயிகள், விவசாயம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை எதிர்த்து சிபிஐ., சிபிஐ(எம்) எம்.பி.க்கள் போராட்டம்!

author img

By

Published : Sep 15, 2020, 7:01 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேற்று (செப்டம்பர் 14) தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்வரைவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உழவர்களுக்கு எதிரான சதி என குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்கவை உறுப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு சட்ட வடிவம் தரும் இந்த சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.