ETV Bharat / bharat

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: போராட்டக் களமாகும் மேற்குவங்கம் - ஹத்ராஸ் பாலியில் வன்கொடுமை

கொல்கத்தா: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் விதமாக மேற்கு வங்கத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

மேற்குவங்கம்
மேற்குவங்கம்
author img

By

Published : Oct 4, 2020, 10:25 PM IST

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே, ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே எரித்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் சார்பில் மேற்குவங்கம் கொல்கத்தாவில் அக்டோபர் 6ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து இடது முன்னணி தலைவர் பீமான் போஸ், எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மண்ணன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. மாநிலத்தில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்து மக்களுக்கு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.