நிலவின் மேற்புறத்தை ஆராயும் வகையில் இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை மாதம் அனுப்பியது. நிலவின் தென்பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2, கடைசி நேரத்தில் லேண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.
லேண்டர் தரையிறங்குவதில்தான் தோல்வி ஏற்பட்டதே தவிர, ஆர்பிட்டார் எனப்படும் வட்டமடிப்பான் தொடர்ந்து நல்ல முறையிலேயே செயல்பட்டுவருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிலவின் மேற்பரப்பில் தனது ஆய்வை தொடர்ந்து ஆர்பிட்டார் மேற்கொண்டுவருகிறது.
சூரியனில் இருந்து நிலவின் மேற்புரத்தில் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளியை ஆராயும் வகையில், Imaging Infrared Spectrometer (IIRS) என்ற கருவி சந்திரயான் ஆர்பிட்டாரில் இணைக்கப்பட்டிருந்தது. அது நிலவின் மேற்பரப்பிலிருந்து பிரதிபலிக்கும் பல்வேறு ஒளிகளை ஆராய்ந்து இஸ்ரோவுக்கு அனுப்பியிருக்கிறது.
இத்தகவலை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பூமியின் வேலி'யை ஆய்வு செய்யும் சந்திரயான் 2