ஹைதராபாத்: மறைந்த நிசாம் மிர் ஒஸ்மான் அலி கானின் கடைசி மகளான சாஹெப்சாடி பஷீருன்னிசா பேகம் தனது 93ஆவது வயதில் நேற்று (ஜூலை 28) காலமானார்.
இவர் நிசாம் மன்னனின் கடைசி நேரடி வாரிசாவார். ஜூலை 28ஆம் தேதி காலை புராணி ஹவேலியில் உள்ள அவரது இல்லத்தில் தன் இறுதி மூச்சை சுவாசித்தார். இதுநாள் வரையில் சாஹெப்சாடி பஷீருன்னிசா பேகம், தனது ஒரே மகளான ரஷீதுன்னிசா பேகத்துடன் வசித்து வந்தார்.
அவர் பழைய ஹைதராபாத் நகரிலுள்ள தர்கா ஹஸ்ரத் யஹியா பாஷாவில் அடக்கம் செய்யப்பட்டார். இறுதிச் சடங்கில் நிசாமின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
சபரிமலை விமான நிலையம்: தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்
பரவலாக ஹைதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் ஹைதராபாத் அரசு என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஹைதராபாத் அரசு தற்கால ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.
ஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்ற பொருள்தரும் நிசாம்-உல்-முல்க் என்பதன் சுருக்கமே நிசாம் ஆகும். 1719ஆம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் இந்தப் பட்டத்துடன் ஹைதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த கமார்-உத்-தின் கான், அசாஃப் ஜா இந்த வம்சத்தை தொடங்கினார்.
1707இல் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டார். 1798 முதல் பிரித்தானிய இந்தியாவின் பல சிற்றரரசுகளில் ஒன்றாக, உள் விவகாரங்களில் தன்னாட்சி கொண்டதாய், ஹைதராபாத் அரசு விளங்கியது.
கரோனா தொற்றால் ரயில்வே துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு!
இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் இலக்கியம், கலை, கட்டட வடிவமைப்பு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர். சிறந்த உணவை விரும்பிய நிசாம்கள் சிறந்த நகைகளையும் சேகரித்திருந்தனர். செப்டம்பர் 17, 1948இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்க இந்திய ராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது.