இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவி ஜெயந்தி புஷ்பா குமாரி உள்ளிட்ட குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் நேற்று ரேணிகுன்டா விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திருப்பதி வந்த அவர் நேற்று இரவு தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கினார். இதையடுத்து இன்று ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவர் சாமி தரிசனம் செய்தார்.
இலங்கை அதிபர் ஏற்கனவே 2015, 2016ஆம் ஆண்டுகளில் தரிசனம் செய்ய வந்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக அவர் சாமி தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.