இந்த ஆண்டு பிப்ரவரியில், மஹிந்த ராஜபக்ச இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர் தனது முதல் அரசுமுறை சுற்றுப்பயணத்தில், 19ஆவது சட்ட திருத்தத்தின் மீதான மோதல் அவருக்கும் அவரது தம்பி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்று கேட்கப்பட்டது. 2009ல் புலிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிய கடந்த கால ஜனாதிபதியும், வலிமையான தலைவருமான மஹிந்தா, “இல்லை, இல்லை, இல்லை. தற்போதைய அரசியலமைப்பு கட்டமைக்கப்பட்ட விதம் மற்றும் 19வது திருத்தத்தின் குழப்பம் ஆகியவற்றை நான் மற்றும் கோத்தபய போன்ற இரண்டு சகோதரர்கள் மட்டுமே கையாள முடியும் (சிரிக்கிறார்). இல்லையெனில் எந்த ஜனாதிபதியும் பிரதமரும் இந்த பிரச்சினையில் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்” என்று ஒரு இந்திய ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டார்
ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொற்றுநோய்க்கு மத்தியில் 145 இடங்களுடன் மகிந்த ராஜபக்ச ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதால் 19வது திருத்தம் முக்கிய மையமாக இருக்கும். முன்னதாக, ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் ஏறக்குறைய 71 விழுக்காடு வாக்குகள் பதிவானது, இது 2015ல் பதிவான 77 விழுக்காடு வாக்குகளை விடக் குறைவு. தற்போதைய மஹிந்த ராஜபக்ச வடமேற்கு தலைநகர் மாவட்டமான குருநாகல-வில் இலங்கை பொதுஜனா கட்சியின் (SLPP) பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மத்திய பிராந்தியமான பொலனருவா-விலிருந்து போட்டியிட்டார், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட்டனர். சஜித், தனது கட்சி சமகி ஜன பலவேகயா (SJP) 54 இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து இப்போது முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளார்.
அரசியலமைப்பை திருத்துவதற்கு 225 உறுப்பினர் பாராளுமன்றத்தில் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் நிலையில் அதிபருக்கு தேர்தல் முடிவுகள் ஒரு பெரிய காட்சியாக வந்துள்ளன. நாட்டின் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துசெய்வது அல்லது மாற்றியமைப்பது என்ற பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மொத்தம் 150 இடங்கள் தேவைப்படும். 2015ஆம் ஆண்டில் மஹிந்தா தனது பத்து ஆண்டு ஆட்சிக்குப் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்து சிறிசேனா அதிபரானார். இந்தத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, அவற்றை பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு சமமாக அதிகாரம் அளித்து நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு வழிவகுத்தது. இந்த விவகாரத்தில் மஹிந்தாவிற்கு மக்கள் ஈர்ப்பு இருந்தபோதிலும், இது அவரது அதிகாரங்களை குறைத்து அதிகாரங்களை மீண்டும் அதிபருக்கே அளிக்கும் என்பதால் அவர் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதியுடன் விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்குரியது.
290க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சிறிசேனாவிற்கும் விக்ரமசிங்கத்திற்கும் இடையிலான கசப்பான உள் சண்டை, மோசமடைந்ததால் அது 2019 நவம்பர் அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற வழிவகுத்தது. இந்த வாக்கெடுப்புகளில் UNP ஐக்கிய தேசியக் கட்சி இப்போது தீவின் 3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மோசமான தோல்வியை தழுவியுள்ளதால், ஒரு வலுவான எதிர்ப்பு இல்லாத நிலையில், ராஜபக்சக்களின் கடந்தகால சர்வாதிகாரங்கள் விரைவில் மீண்டும் காட்சிக்கு வந்து விடுமோ என்ற கவலையும் அதிகரிக்கிறது.
கடந்த காலத்தில் ராஜபக்சக்களை நேசித்த இந்தியாவைப் பொறுத்தவரை, பெய்ஜிங்குடன் மஹிந்தாவின் ஊர்சுற்றல் மற்றும் தமிழ் சிறுபான்மையினருக்கு அதிக அரசியல் பிரதிநிதித்துவத்தை அனுமதிக்க விரும்பாததைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் கோதபயா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் உறவுகளை மீட்டமைக்கும் செயல்முறை தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்தாவுக்கு இப்போது கிடைத்த வெற்றியின் மூலம், எல்லைப் பகுதியில் நீடித்து வரும் சர்ச்சை மற்றும் நேபாளத்தின் இந்திய எதிர்ப்பு போன்றவற்றுக்கு மத்தியில் புது தில்லி, சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, உலகத் தலைவர்களில் முதலாவதாக மஹிந்தாவை அழைத்து உறவுகளை புதுப்பிக்க பிரதமர் மோடி களம் அமைத்தார்.
"உங்கள் தொலைபேசி அழைப்பு வாழ்த்துக்கு நன்றி PM@narendramodi" என்று ராஜபக்ச ட்வீட் செய்தார். " இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். இலங்கையும் இந்தியாவும் நண்பர்கள் மற்றும் உறவுகள்” என்று பிரதமர் மோடியின் வாழ்த்து அழைப்பு குறித்து மஹிந்தா ட்வீட் செய்துள்ளார்.
தேர்தல்களில் மோசமான செயல்பாடுகளை கொண்ட வடக்கு மற்றும் கிழக்கில் பிளவுபட்ட தமிழ் தேசிய கூட்டணி 13வது திருத்தத்தின் கீழ் ஒரு அரசியல் நல்லிணக்கம் மற்றும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. வடகிழக்கு முழுவதும் ஒரு பெரிய கட்சியாக இருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் இழந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் ராஜபக்சக்கள் அதிகாரத்திற்கு திரும்பியதால், 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழ் வாக்காளர்கள் ஏற்கனவே எச்சரிக்கையாக இருந்தனர். ஜனாதிபதி கோத்தபயா ஏற்கனவே 13-Aன் சில பகுதிகளை செயல்படுத்த முடியாது என்றும் அதற்கான மாற்று வழிகளை யோசிக்கும்படியும் கூறியிருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக மஹிந்தா ஒரு சிங்கள பழமைவாத தளத்தில் தேர்தலில் போட்டியிடுவதை தெளிவுபடுத்தினார். இந்த தேர்தல் முடிவுகள், டெல்லிக்கு கொழும்புவுடன் அதிகாரப் பகிர்வு என்ற விஷயத்திலும், தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியலில் எதிரொலிக்கும் இலங்கை தமிழர் இன நெருக்கடிக்கு எதிர்கால தீர்வு விஷயத்திலும் ஒலிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் எதிர்காலம், குறிப்பாக உத்திசார் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டைனர் முனையம் (ECT) திட்டம், நிச்சயமற்றதாகவே உள்ளது. 700 மில்லியன் டாலர் மதிப்பிடப்பட்ட செலவில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் கூட்டாக முனையத்தை உருவாக்க இலங்கை மே 2019-ல் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை வழங்கியது. முன்னாள் அதிபர் தேசியவாதத்தை கையிலெடுத்துக் கொண்டு விளையாடுவதோடு, ‘தேசிய சொத்துக்களை’ நிர்வகிப்பதில் எந்தவொரு ‘வெளிநாட்டு ஈடுபாட்டையும்’ விரும்பாததால், இந்த ஒப்பந்தம் விக்ரமசிங்கேவிற்கும் சிறிசேனாவிற்கும் இடையில் ஒரு முக்கிய புள்ளியாக மாறியது. இரு பிரிவுகளும் கூட்டணி அரசாங்கத்தை எதிரெதிர் திசைகளில் இழுத்தன. ஜூலை மாத தொடக்கத்தில் தமிழ் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, ஒரு வருடம் கழித்து கூட திட்டத்தின் தலைவிதி தெளிவாக இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது
“இது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். ஆனால் இது குறித்து நாங்கள் இதுவரை ஒரு முடிவும் எடுக்கவில்லை ” என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், சீனர்களுக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு அளிக்கப்பட ஹம்பன்டோட்டா துறைமுகம் இலங்கை தேசியவாத எல்லைக்கு வெளியே இருக்கிறது போலும். சீனர்களும் கொழும்பு நகர திட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தனது தந்தையின் ஹம்பாந்தோட்டா தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்ற மஹிந்தாவின் மகன் நமல், தனது தொகுதியில் நிலையான சுற்றுச்சூழல் சார்ந்த உல்லாச இடங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஒருங்கிணைந்த திட்டமிட்ட நகரங்களை உருவாக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளார். ஹம்பாந்தோட்டை சீனாவில் கட்டப்பட்டு, இயக்கப்படும் தெற்கு துறைமுகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்த ஒரு சமீபத்திய பேட்டியில், “நெடுஞ்சாலைகள், துறைமுகம், சர்வதேச விமான நிலையம் மற்றும் அனைத்து தளவாடங்களும் தயாராக இருக்கும் தீவின் அடுத்த வணிக நகரமாக ஹம்பன்டோட்டா மாறும், நாங்கள் இதைச் செய்வோம்" என்று கூறினார்
வடக்கு மற்றும் கிழக்கில் ஆக்கிரமிப்பு சீன ஊடுருவலை எதிர்கொள்வது, மேற்கில் பயங்கரவாத ஊடுருவல்கள் மற்றும் மோதல்கள், நேபாளத்தின் வரைபட ஆக்கிரமிப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான சொல்லாடல் போன்றவற்றை எதிர்கொள்ளும் மோடி அரசாங்கத்திற்கு, அண்டை நாடுகளுடன் நட்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வளர்ப்பது என்பது ஒரு முழக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு விரிவாக்க முயற்சியில் இருக்கும் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளுக்கு தங்களை தயார்நிலைப்படுத்தி இந்தியாவிற்கு வலுவை சேர்க்கலாம், ஆனால் சிறிய தீவு நாடுகளும், கடற்கரை நாடுகளும் இந்தியாவின் கடல் பாதுகாப்பு மற்றும் கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. . அதிக கடன் மற்றும் மறு நிதியளிப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் சீன செல்வாக்கை இந்தியாவால் தடுக்க முடியாது, கோவிட்டிற்கு பிந்தைய உலகில் சுற்றுலா பாதிப்புக்குள்ளான அதன் பொருளாதாரத்துடன் இலங்கை போராடுகிறது. மதிப்பீடுகளின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் கொழும்புவின் கடன் நிலுவை கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும். 960 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன்களை திருப்பி செலுத்துவதற்கு மூன்று ஆண்டு கால அவகாசம் கோரி பிப்ரவரி முதல் மஹிந்தா விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை. இருந்தாலும் நவம்பர் 2022 வரை இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் நாணய மாற்று வசதிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டது.
கடந்த காலத்தைப் போலவே, புதுடெல்லி மஹிந்தாவின் இந்தியாவுக்கு ஒரு ஆரம்ப மற்றும் முதல் வெளிநாட்டு பயணத்திற்கு அல்லது இரு பிரதமர்களுக்கிடையில் ஒரு மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு கோவிட் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழி வகுக்க விரும்புகிறது. ஆனால் உறவுகள் குறியீட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக ராஜபக்சகள் அதிகாரத்தில் இருந்தபோது இந்திய இலங்கைக்கு அதிகமாக அளித்து குறைவாக பெற்றுள்ளதாக இந்திய தரப்பில் உள்ள சிலர் வாதிடுகின்றனர்.
கடந்த காலத்திலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாலும், கடந்த காலத்தின் நிழல்கள் எதிர்கால உறவுகளின் தற்போதைய மற்றும் வடிவத்தின் போக்கை தீர்மானிக்கக்கூடாது. ராஜபக்சக்களும் கடந்த காலங்களில் சீன கடன்களால் தங்கள் கையை சுட்டுக்கொண்டு, தோல்வியுற்ற பொருளாதாரம் மற்றும் வேலை இழப்புகளுக்கு மக்கள் கோபத்தை எதிர்கொண்டனர். சிறிசேனா-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் முன்னரே எச்சரித்திருந்தும் 2019 ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பை இலங்கை அரசாங்கத்தால் தவிர்க்க முடியவில்லை என்பதும் அதிபர் தேர்தலில் கோத்தபயாவுக்கு வாக்களித்த மக்களால் தீவிரமாக கவனிக்கப்பட்டது.
நேபாளம் மற்றும் பங்களாதேஷுடனான உறவுகளில் சலசலப்புகளுக்கு இடையில், இந்தியா ராஜபக்சகளுடனான உறவை உறுதிப்படுத்துவதற்கான தளவாட ஒத்துழைப்புக்கு வழிகளைக் கண்டுபிடித்து பாதுகாப்புக்காக முதலீடு செய்ய வேண்டியிருக்கும், மேலும் பெய்ஜிங்குடன் அதிகமாக உறவாடுவதற்கு முன்பு புது தில்லியுடனான உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதற்கு, கொழும்பு சமீபத்திய காலத்தின் படிப்பினைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இரண்டு அண்டை நாடுகளின் பெரிய ராஜதந்திர நலன்கள், தனிநபர்களின் சந்தேகங்களை குறைக்க வேண்டும்.
முன்னாள் வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண் கோத்தபயாவின் வெற்றியின் பின்னர் ஈடிவி பாரத்திடம் கூறியது போல், அண்டை நாடுகளில் உள்ள தலைவர்களை யார் நண்பர், நண்பர் அல்ல என்று முத்திரை குத்த முயற்சிப்பது, அது நமக்கு ஒருபோதும் பலன்களை வழங்கவில்லை. சில பொதுவான நலன்கள், ஒருங்கிணைப்புகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இந்த உறவுகளைத் தொடர்வது எல்லாவற்றையும் விட அதிக பலன்களை வழங்கும்.