பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சி எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த ஆறே மாதங்களில் தேஜ் பிரதாப் தனது மனைவி ஐஸ்வர்யாவிடம் இருந்து விவாகரத்து கோரினார். இந்த திருமண வாழ்க்கையில் தான் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் தற்போது வரை ஐஸ்வர்யா தனது மாமியார் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று அவர் தனது மாமியார் வீட்டிலிருந்து வெளியேறி தனது பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து வெளியேறும் போது கண்ணீர் மல்க மிகுந்த சோகத்துடன் சென்ற அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.