ETV Bharat / bharat

யானை லட்சுமிக்கு பெரும் வரவேற்பு; பக்தர்கள் கொண்டாடி மகிழ்வு!

யானை லட்சுமி சுமார் 7 கி.மீ.,தூரம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அதற்கு, ஆங்காங்கே பக்தர்கள் பழங்களைக் கொடுத்து வரவேற்பு அளித்தனர். பலர் அதனுடன் நடந்தே வந்தனர். நேரு வீதி வழியாக யானை லட்சுமி வந்தபோது மேளதாளங்களுடனும், மலர்த் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

லட்சுமி யானை
லட்சுமி யானை
author img

By

Published : Jul 18, 2020, 10:13 PM IST

புதுச்சேரி: பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானை லட்சுமியின் மீது மிகுந்த பிரியம் கொண்டுள்ளனர். இச்சூழலில், கேரளாவில் காட்டுயானை பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் கோயில்களில் உள்ள யானைகளுக்கு வனம் போன்ற பகுதியில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

புதுவை மணக்குள விநாயகர் கோயில் யானையை குறுகிய இடத்தில் வைத்துள்ளனர். கல்லில் நிறுத்தப்படுவதால், யானையின் காலில் வலி ஏற்பட்டுள்ளது எனப் புகார் எழுந்தது. இதனால் கடந்த ஜூன் 8ஆம் தேதி யானை லட்சுமி குருமாம்பேட்டில் உள்ள வனம் போல காட்சியளிக்கும் காமராஜர் வேளாண் அறிவியல் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

பச்சிளம் பெண் குழந்தை குளக்கரையோரம் மீட்பு!

பக்தர்கள் மீண்டும் யானை லட்சுமியை கோயிலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். வனப் பகுதியில் பாம்பு, தேள் போன்றவை உள்ளதால், யானைக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வந்தனர்.

இது தொடர்பாக வாட்ஸ்அப்பில் காணொலியும் பரவியது. இவ்வேளையில் யானை லட்சுமியை கோயிலுக்குக் கொண்டுவரவும், உரிய சிகிச்சை அளித்துப் பராமரிக்கவும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் 40 நாட்களுக்குப் பிறகு இன்று(ஜூலை 18) காலை 7.30 மணிக்கு வேளாண் அறிவியல் மையத்திலிருந்து யானை லட்சுமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், அன்பழகன் ஆகியோருடன் பக்தர்கள் கலந்துகொண்டு யானை லட்சுமிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

யானை லட்சுமிக்கு பெரும் வரவேற்பு; பக்தர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்

பின்னர் யானை லட்சுமி சுமார் 7 கி.மீ., தூரம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அதற்கு ஆங்காங்கே பக்தர்கள் பழங்களைக் கொடுத்து வரவேற்பு அளித்தனர். பலர் அதனுடன் நடந்தே வந்தனர். நேரு வீதி வழியாக யானை லட்சுமி வந்தபோது மேளதாளங்களுடனும், மலர்த் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், மணக்குள விநாயகர் கோயிலுக்கு, சுமார் 10.30 மணிக்கு யானை லட்சுமி வந்தது. அங்கு மணக்குள விநாயகரை வணங்கிய யானை, கோயிலை வலம் வந்தது. அங்கு அதற்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.