பஞ்ச்குலா: கரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் இந்த சூழலில், பறவை காய்ச்சல் பரவிவருவதாக தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், கேரளா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஹரியானா மாநிலத்தில் கோழிகள் லட்சக்கணக்கில் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறந்த பறவைகளின் உடல்கள் போபாலில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க குறிப்பிட்ட ஊர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அலுவர்களும், கால்நடை பராமரிப்பு அலுவலர்களும் இது தொடர்பான நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.