ETV Bharat / bharat

குஜராத்தில் வங்கி பெண் ஊழியர் மீது காவலர் தாக்குதல்: காணொலி வைரல்! - Lady staff of a bank was assaulted by a police

சூரத்: குஜராத்தில் வங்கிக்குள் நுழைந்த காவலர் பெண் ஊழியரை தாக்கிய காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

காவலரால் தாக்கப்பட்ட பெண் வங்கி ஊழியர்: காணொளி வைரல்!

author img

By

Published : Jun 24, 2020, 11:11 AM IST

Updated : Jun 24, 2020, 11:58 AM IST

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி பகுதியில் உள்ள சிண்டிகேட் வங்கியில் நேற்று (ஜூன் 23) மாலை 4.30 மணிக்கு சுபாஷ் பாய் பராக் என்ற காவலர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பெண் வங்கி ஊழியரிடம் கணக்குப் புத்தகத்தில் கணக்கு விவரத்தை அச்சடித்து தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு, அச்சடிக்கும் இயந்திரம் பழுதடைந்துவிட்டதாக அப்பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அப்பெண்ணை தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அங்கிருந்த மற்றொரு ஊழியரையும் தாக்கியுள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

காவலரால் தாக்கப்பட்ட பெண் வங்கி ஊழியர்: காணொலி வைரல்!

இதனையடுத்து வங்கி பெண் ஊழியரை தாக்கிய காவலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. அந்தவகையில் இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கி பெண் ஊழியரைத் தாக்கிய காவலரை இடைநீக்கம் செய்யுமாறு சூரத் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் ஆணைருக்கும் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  • My office spoke to the Commissioner of Police, Shri. Bhrambhatt (IPS). He has assured us that he himself will visit the branch & assure the staff of their safety. Also he assured that the accused constable shall be suspended immediately. @CP_SuratCity @PIB_India @canarabank

    — Nirmala Sitharaman (@nsitharaman) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க...காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - ஜெயராஜ் மனைவி புகார்

Last Updated : Jun 24, 2020, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.