கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளிவராமல் தடுப்பதற்காக காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர்.
இதனால் எப்போதும் போல் இல்லாமல் காவல் துறையினருக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது. கரோனா தடுப்புப் பணியின் முக்கியத்துவம் கருதி கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியின் பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர் ப்ரித்வி தனது திருமணத்தைத் தள்ளிவைத்துள்ளார்.
இவருக்கு ஏப்ரல் 5ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் தனது திருமணத்தை ப்ரித்வி ஒத்திவைத்துள்ளார். இந்தச் சம்பவம் அம்மாநில அமைச்சர் சுமலதா அம்ரிஸிற்கு தெரியவர, ப்ரித்விக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 100 கி.மீ. நடைபயணம்... லிஃப்ட்: மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய மனிதநேயர்கள்!