இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில், சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ட்விட்டரில் விமர்சித்த ராகுல், இன்று பிரதமர் நரேந்திர மோடியையும் நேரடியாக விமர்சித்துள்ளார். ராகுல் இந்த விமர்சனத்திற்குப் பதிலடித்தரும் விதமாக லடாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செரிங் நம்க்யால் (பாஜக எம்பி) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
I hope @RahulGandhi and @INCIndia will agree with my reply based on facts and hopefully they won't try to mislead again.@BJP4India @BJP4JnK @sambitswaraj @JPNadda @blsanthosh @rajnathsingh @PTI_News pic.twitter.com/pAJx1ge2H1
— Jamyang Tsering Namgyal (@MPLadakh) June 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I hope @RahulGandhi and @INCIndia will agree with my reply based on facts and hopefully they won't try to mislead again.@BJP4India @BJP4JnK @sambitswaraj @JPNadda @blsanthosh @rajnathsingh @PTI_News pic.twitter.com/pAJx1ge2H1
— Jamyang Tsering Namgyal (@MPLadakh) June 9, 2020I hope @RahulGandhi and @INCIndia will agree with my reply based on facts and hopefully they won't try to mislead again.@BJP4India @BJP4JnK @sambitswaraj @JPNadda @blsanthosh @rajnathsingh @PTI_News pic.twitter.com/pAJx1ge2H1
— Jamyang Tsering Namgyal (@MPLadakh) June 9, 2020
தனது ட்விட்டர் பதிவில் அவர், ”சீனர்கள் இந்திய எல்லையை ஆக்கிரமித்தது உண்மைதான். 1962ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது, அக்சாய் சின் பகுதியையும், 2008ஆம் ஆண்டில் ஐமு கூட்டணி ஆட்சியில் சுமூர், டெம்ஜோக், துன்க்டி ஆகிய பகுதிகளையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. இவை அனைத்தும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில்தான் நடைபெற்றன. உண்மைத் தகவல்களான இவற்றை ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'சீனர்கள் தலைகாட்டும்போது தலைமறைவான பிரதமர் மோடி' - ராகுல் காந்தி விமர்சனம்