ETV Bharat / bharat

குஜராத்தில் இருந்து சொந்த கிராமத்திற்குச் சென்றவர் தற்கொலை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வெளிமாநிலத்தில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : Jun 2, 2020, 5:26 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணிபுரிந்து தற்போது சொந்த கிராமத்திற்கு வந்த ஒருவர் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் அலுவலர் சத்யேந்திர சிங் இன்று (ஜூன் 2) தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “தற்போது வெளிமாநிலத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்களது சொந்த மாநிலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதுபோல் அகமதாபாத்தில் பணிபுரிந்த ராம் பகதூர் என்பவர் தனது புத்வன் கிராமத்திற்கு மே 14ஆம் தேதி வந்துள்ளார். பின்னர் காட்டுப் பகுதி அருகில் ஒரு கொட்டகையில் அவர் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், திடீரென்று அருகில் உள்ள மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதற்கு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது உடற்கூறாய்வு நடந்து வருவதால், அது முடிந்த பின்னர் இதுகுறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.