ETV Bharat / bharat

பல லட்சம் மதிப்பிலான வைரத்தைக் கண்டுபிடித்த தொழிலாளி!

போபால்: 50 முதல் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10.69 காரட் வைரத்தை ஆனந்திலால் குஷ்வாஷா என்பவர் பன்னா மாவட்டத்திலுள்ள சுரங்கத்தில் கண்டுபிடித்துள்ளார்.

diamond mine
diamond mine
author img

By

Published : Jul 24, 2020, 9:19 PM IST

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10.69 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பன்னா மாவட்ட அலுவலர்கள் கூறுகையில், “ ஊரடங்கு காலத்தில் சிறிய அளவிலான வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த வைரம் அப்படியானதல்ல. இந்த கண்டுபிடிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது; இது போன்ற பெரிய அளவிலான வைரத் துண்டுகளின் கண்டுபிடிப்புகள்தான், அதிகரித்து வரும் வைரத்தின் தேவையை பூர்த்தி செய்யும்” என்றார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டம் அதிக வைரம் கிடைக்கும் பகுதியாகும். இதனால் அப்பகுதியில் நிலங்கள் குத்தகைக்கு எடுத்து வைரம் தோண்டும் வேலைகளை பலர் செய்து வருகின்றனர். இதைப் போலவே ஆனந்திலால் குஷ்வாஹா என்பவர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வைரக்கற்களைத் தேடிவந்தார்.

10.69 காரட் வைரத்தைக் கண்டெடுத்த தொழிலாளி!

இது குறித்து அவர் கூறுகையில், ”இந்த வைரத்தைக் கண்டுபிடித்தது எனக்கு மிகப்பெரிய சாதனை. இதைப் போலவே பெரிய அளவிலான வைரத்தைக் கண்டடைய நான் தொடர்ந்து உழைப்பேன். இதற்கு எனது சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் முக்கியமானது. இதற்கு முன்பே ஒரு வைரத்தைக் கண்டுபிடித்து அரசு வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளேன்” என்றார்.

ஆனந்திலால் குஷ்வாஹா தற்போது கண்டுபிடித்துள்ள வைரம் 50 முதல் 80 லட்சம் ரூபாய் வரை மதிப்புடையது என அலுவலர்கள் தெரிவித்தனர். பொதுவாக, பன்னா மாவட்டத்தில் கிடைக்கும் வைரங்கள் தேசிய தாதுப்பொருள்கள் மேம்பாட்டு வாரிய அலுவகத்தில் (என்எம்டிசி) டெபாசிட் செய்யப்படுகின்றன.

பின்னர் அங்கு வைரங்களை மதிப்பிட்ட பின் 3 மாதத்துக்கு ஒரு முறை ஏலத்தில் விடப்படும். அதில் கிடைக்கும் தொகையில் ஒரு பங்கு பணம் மாநில அரசுக்கு ராயல்டியாகக் கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை வைரத்தைக் கண்டுபிடித்தவருக்கு வழங்கப்படுகிறது.

பன்னா மாவட்டம், ராணிப்பூர் பகுதியில் 5 முதல் 10 அடி ஆழத்தில் சிறிய அளவிலான வைரத் துண்டுகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பன்னாவில் உள்ள பல சுரங்கத் தொழிலாளர்கள் அதிகமாகக் காங்கோ வைரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். பிற வைரங்களுடன் ஒப்பிடும்போது இவை அதிக சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.

இதைப் போலவே, தியோரி சர்க்கார், சாகாரியா போன்ற இடங்களிலும் வைரக்கற்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 12 லட்சம் காரட் வைரங்கள் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செம்மண்ணில் வைரம்: மும்முரமாகத் தேடும் விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.