ETV Bharat / bharat

ராஜஸ்தானில் கையூட்டுப் பெற்ற அரசு அலுவலர் கைது!

author img

By

Published : Oct 26, 2020, 7:19 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கையூட்டுப் பெற்ற அரசு அலுவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Rajasthan
Rajasthan

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் தொழிலாளர் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் கேம்சந்த் குமாவாத். இவர், தொழிற்சாலைக்குச் சென்று அங்கு சரியான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றவா என ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தொழிற்சாலைக்கு ஆதரவாக ஆய்வறிக்கை அளிக்க எட்டாயிரம் ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று ஊழல் தடுப்புப் பிரிவு, கேம்சந்த் குமாவாத்தை கைதுசெய்தது. ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவ்ரதன் கோதாரா கூறுகையில், "தொழிற்சாலைக்கு ஆதரவாக ஆய்வறிக்கை அளிக்க உரிமையாளரிடம் ரூ.8000 கையூட்டு கேட்டுள்ளார். அலுவலகத்தில் கையூட்டுப் பெற்ற காரணத்தால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.