ETV Bharat / bharat

நரிக்குறவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விளக்கம் - தேர்தல் ஆணையம்

புதுச்சேரி: தேர்தல் ஆணையம் சார்பில் நரிக்குறவர்களுக்கு வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விளக்கம் அளிக்கும் லாஸ்பேட்டை தொகுதியில் கூட்டம் நடைபெற்றது.

நரிக்குறவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விளக்கம்
author img

By

Published : Mar 29, 2019, 6:54 PM IST

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் எவ்வாறு பங்கெடுத்தல் என்பது குறித்து விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின்படி நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்படும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காணொளி காட்சி மற்றும் இயந்திரங்கள் மூலம் விளக்கம் அளித்துவருகின்றனர்.

நரிக்குறவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விளக்கம்

அதன் ஒருபகுதியாக புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதிக்கு சென்ற மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்கு இயந்திரம் மூலம் வாக்களிப்பது தொடர்பாக காணொளி காட்சிகள் மூலம் விளக்கம் அளித்தனர். இதில் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொணடனர்.இதையடுத்து நரிக்குறவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக அதே காலனியைச் சேர்ந்த சங்கர் கூறுகையில், தேர்தல் நேரங்களில மட்டுமே அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு வருகின்றனர். அப்போது குறைகளை கேட்டு செல்லும் அவர்கள் நடவடிக்கையே எடுப்பதில்லை எனக் குற்றம் சாட்டினர். எங்கள் சமூகத்தினர் தொழில் தொடங்க அரசு கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்தார்.

Intro:தேர்தல் துறை சார்பில் புதுச்சேரி நரிக்குறவர்களுக்கு அவரது காலனியில் சென்று வாக்களிப்பது குறித்து இயந்திரத்தின் மூலம் விளக்க கூட்டம் நடைபெற்றது ஆர்வத்துடன் நரிக்குறவர்கள் பங்கேற்றனர்

Body:இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்த என்ற திட்டத்தின் கீழ் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் மூலம் பல்வேறு பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர் மற்றும் அதன் அருகே பழங்குடியினர் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு சிறப்பு வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது அப்போது மண்டல உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யான சுதாகர் தலைமையில் நரிக்குறவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் சென்று மின்னணு ஓட்டுப்பதிவு மூலம் வாக்குப் பதிவு செய்யும் முறை vvpat கருவின் செயல் விளக்கம் மற்றும் நடமாடும் வாக்குப்பதிவு நிலையம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது மேலும் தேர்தல் நேரங்களில் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

நரிக்குறவர் சங்கர் இது தொடர்பாக கூறுகையில் தங்களுக்கு தேர்தல் நேரங்களில மட்டுமே அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு இதுபோல் விழிப்புணர்வுக்காக வருகின்றனர் குறைகளை கேட்கின்றனர் ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை அரசு தொழில் தொடங்க கடன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை அதிகாரியிடம் தான் வைத்துள்ளதாக தெரிவித்தார்

Conclusion:தேர்தல் துறை சார்பில் புதுச்சேரி நரிக்குறவர்களுக்கு அவரது காலனியில் சென்று வாக்களிப்பது குறித்து இயந்திரத்தின் மூலம் விளக்க கூட்டம் நடைபெற்றது ஆர்வத்துடன் நரிக்குறவர்கள் பங்கேற்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.