கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் சூழலில், தாங்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதம் அளித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேரும் நேற்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடிதத்தை ஏற்க கோரிக்கை வைக்கலாம் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் செவ்வாய்க்கிழமை வரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, சபாநாயகர் அனுமதித்தால் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.