கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி 14 மாதங்களாக ஆட்சி நடத்தி வந்தது. இதில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, அந்த கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆளும் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு கவிழ்ந்து. மேலும், முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத விவசாயி ஒருவர், தான் பயிரிட்டிருந்த சில்வர் செடியை வெட்டியுள்ளார். இந்த சில்வர் செடி தீக்குச்சிக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து அந்த விவசாயி கூறுகையில், குமாராசாமி போன்ற நல்ல முதலமைச்சர் யாரும் இனி கர்நாடகாவை ஆட்சி செய்யப்போவதில்லை. அதனால் தான், பயிரிட்ட சில்வர் செடிகளை அழித்தேன் என தெரிவித்தார்.