கேமரா முன்பு தோன்றுவதற்கு முன்னர் மோடி மேக்கப் செய்து கொள்வதாகவும், நாளொன்றுக்கு 10 ஆடைகளை அவர் மாற்றிக் கொள்வதாகவும் கர்நாடக முதலமைச்ச குமாரசாமி விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள கக்வாத் தொகுதியின் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ கேஜ், மோடி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், நன்றாகவும் இருக்கிறார் என்றும் அதனால் அவர் மேக்கப் செய்துகொள்வதாகவும் விமர்சித்தார்.
மேலும், கருப்பாக இருக்கும் குமாரசாமி, 100 முறை குளித்தாலும் கருப்பாகத்தான் இருப்பார் எனவும் ராஜூ கேஜ் கூறியுள்ளார். அவரின் இந்த விமர்சனம் கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.