மார்ச் 3, 2016: உளவு பார்த்ததாக கூறி இந்திய கப்பற்படை அலுவலரான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்
மார்ச் 25, 2016: ஜாதவ் கைது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
மார்ச் 29, 2016: ஈரானில் தொழில்புரிந்து வந்த ஜாதவை பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக இந்தியா தெரிவித்தது.
ஏப்ரல் 10, 2017: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
ஏப்ரல் 11, 2017: குல்பூஷன் ஜாதவைக் காப்பாற்ற முயற்சிப்பதாக அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஏப்ரல் 14, 2017: குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை மற்றும் மரண தண்டனையை எதிர்த்து இந்திய தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
மே 8, 2017: பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.
மே 9, 2017: ஜாதவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
மே 15, 2017: குல்பூஷன் வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் விவாதம் செய்தன. அப்போது குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மே 18, 2017: மரண தண்டனை தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.
மே 29, 2017: பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்த குல்பூஷன் திட்டமிட்டதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டியது.
ஜூன் 22, 2017: பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி குல்பூஷன் ஜாதவ் மனு தாக்கல் செய்தார்.
ஜூலை 2, 2017: குல்பூஷனை இந்திய வழக்கறிஞர் சந்திப்பதற்கு ஐந்தாவது முறையாக அனுமதி மறுத்தது பாகிஸ்தான்.
டிசம்பர் 8, 2017: குல்பூஷன் தனது குடும்பத்தாரை டிசம்பர் 28ஆம் தேதி சந்திக்கலாம் என பாக். அனுமதி அளித்தது.
டிசம்பர் 20, 2017: குல்பூஷன் குடும்பத்திற்கு பாகிஸ்தான் விசா வழங்கியது.
டிசம்பர் 25, 2017: ஜாதவ் தனது குடும்பத்தாரை சந்தித்தார்.
ஜூலை 17, 2018: சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷனின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரிய இந்தியாவின் மனுவுக்கு எதிராக பாகிஸ்தான் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தது.
ஜூலை 4, 2019: குல்பூஷன் வழக்கின் தீர்ப்பை ஜூலை 17ஆம் தேதிக்கு சர்வதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜூலை 17, 2019: மரண தண்டனைக்கு தடை விதித்த சர்வதேச நீதிமன்றம், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.