முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கர்நாடக அரசு, இன்று (ஜூன்18) முகக்கவச விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர் பி.எச். அனில் குமார் கூறுகையில், “ஏற்கனவே மாநகராட்சி சார்பில் முகக்கவசம் குறித்து அறிவிப்புகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில், இன்று முகக்கவச விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கர்நாடகாவின் பெருநகரங்களில் முகக்கவசம் இன்றி நடமாடுவோரிடம் அபராதம் விதிக்கப்படுகிறது.
பெங்களூருவில், கடந்த 11ஆம் தேதியன்று முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1.8 லட்சம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்; உடலுக்கு ஆட்சியர் தலைமையில் அஞ்சலி!