ETV Bharat / bharat

பத்ம பூஷண் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் யார்? - padma Padma bhusan awardee

திண்டுக்கல்: பத்ம பூஷண் விருது பெற்றிருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் குறித்த தொகுப்பு

krishnammal jagannathan
krishnammal jagannathan
author img

By

Published : Jan 25, 2020, 11:58 PM IST

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரியில் படித்த முதல் பெண்மணி கிருஷ்ணம்மாள் ஆவார். இவர் தொடர்ச்சியாக நில உரிமை சார்ந்து இயங்கி வந்தவர். 1968ஆம் ஆண்டு நடந்த கீழ் வெண்மணி படுகொலைக்கு பிறகு உழவனின் நில உரிமை இயக்கத்தை கட்டமைத்தவர். தன்னுடைய நில உரிமை அமைப்பின் மூலமாக பட்டியலின விளிம்புநிலை மக்களுக்கு 2,500 வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் பெண்களின் தனித் திறமையை ஊக்குவிக்க தையல் பயிற்சி, கணினி பயிற்சி, தட்டச்சு பயிற்சி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். ஸ்வீடன் நாட்டு நோபல் பரிசு என்று கருதப்படும் ரைட் டூ லைவ்லிவுட் என்ற விருதை பெற்றவர். இவருக்கு தற்போது வயது 96. இவர் விவசாயிகள், பெண்கள், பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக இன்னமும் களத்தில் போராடிவருகிறார்.

இதையும் படிங்க: 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

Intro:Body:

krishnammal jagannathan padma vibhushan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.