கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோலி. இவர் தனது கணவரின் உறவினரை திருமணம் செய்வதற்காக 10 மாத குழந்தை உள்ளிட்ட 6 பேரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்துகொடுத்து கொலை செய்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான ஜோலி, மேத்யூ, பிரஜிகுமார் ஆகிய மூன்றுபேரையும் 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.