கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பிரதான சாலையில் பாதசாரி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். வழக்கம்போல வாகனங்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அவரது இடது பக்கமாக வேகமாக வந்த வாகனம் ஒன்று, நூலிழையில் அவர் மீது மோதாமல் சென்றது.
இயர்ஃபோன் அதிகம் பயன்படுத்தும் நபரா நீங்கள்? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க!
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், சிறிது நேரம் என்ன செய்வது எனத் தெரியாமல் நிலைகுலைந்து நின்றார். பின்னர் அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்தார். தட்டசேரி, விஜயா பேலஸில் இருந்த கண்காணிப்புப் படக்கருவியில் கைப்பற்றப்பட்ட இச்சம்பவம் குறித்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த நபர் சங்கரமங்கலம் நோக்கி நடந்து கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
“இந்த மாதத்திற்கான சிறந்த அதிர்ஷ்டசாலி விருதை இவருக்கு வழங்கலாம்” என்பன போன்ற மீம்களுடன் இந்த சிசி டிவி காட்சிப்பதிவை ட்விட்டர்வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.