ஆம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதில் அர்ச்சனா சிங் என்பவர், தனது இரண்டு குழந்தைகளை இழந்துள்ளார்.
இதுகுறித்து அர்ச்சனா கூறுகையில்; 'அந்த சோகமான சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. கடந்த மே 20ஆம் தேதி, நாங்கள் மாலையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. யூகலிப்டஸ் மரம் எங்கள் குடிசையில் விழுந்ததால் இருள் மூழ்கியது.
மனநிலை சரியில்லாத என் கணவர், என்னை எப்படியோ அதிலிருந்து வெளியே இழுத்துவிட்டார். ஆனால், நாங்கள் எங்கள் மகன்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். என் குழந்தைகளான ரஞ்சித் (18) பிரசென்ஜித் (16) எங்கள் கண் முன்னே இறந்துவிட்டனர். என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் என்னைப் ஊமையாக்கி விட்டது.
மாநில அரசு எங்களுக்கு இழப்பீடு வழங்கியது. ஆனால், இப்போது நாங்கள் உதவியற்றவர்களாக உணர்கிறோம்' என வேதனையுடன் கூறினார்.
இந்தப் புயலால் சுமார் 5 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சொந்த மாநிலத்தின் தேவையைப் பிரதமர் பூர்த்தி செய்யவில்லை'