ETV Bharat / bharat

சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் ‘Know Your Neighbour’!

2016ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ‘Know Your Neighbour’.

social harmony
author img

By

Published : Jun 24, 2019, 4:18 PM IST

‘Know Your Neighbour’ போன்ற அமைப்பை தற்போது இந்தியா முழுவதும் தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ’ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச் சொல்லி ஒரு இளைஞரை அடித்துக் கொலை செய்திருக்கிறது ஒரு மதவெறிக் கும்பல், மாட்டிறைச்சி உண்ணும் காரணத்துக்காக பல சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மதத்தின் பெயரால் நடந்த கொலைகள் ஏராளம்.

மதச்சார்பற்ற நபர்கள் மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்தாலும், அனைவரும் அமைப்பாகத் திரள வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். விரும்பும் கடவுளை வணங்குவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் பண்டிகை என்பது அனைவருக்குமானது, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும், அன்பைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

‘Know Your Neighbour’ அமைப்பில் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இருக்கின்றனர். எந்தப் பண்டிகையாக இருந்தாலும் சாதி, மத பேதமின்றி கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமல்லாது, நல்ல படங்களை திரையிட்டு விவாதிப்பது, இலக்கிய வாசிப்பு, இலக்கிய - கலாசார விழாக்களை நடத்துவது என பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.

சமூக வலைதளங்களின் மூலம் ஒரு கும்பல் வெறுப்புணர்வை விதைத்து மதவெறியைத் தூண்டும் வேலைகளை செய்துகொண்டிருக்கிறது. இதில் வாட்ஸ்அப்பின் பங்களிப்பு அதிகம். இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி நபர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு வாட்ஸ்அப் மூலமாக பரப்பப்பட்ட வதந்திகளால் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25 ஆகும். 2017ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இதுபோன்ற வதந்திகளால் 33 நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட விரும்பும் இந்திய குடிமக்கள், இதுபோன்ற வதந்திகள் பரவுவதை தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பொய்யான செய்திகள் பரவுவதை காவலர்கள் உதவியுடன் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ‘Know Your Neighbour’ அமைப்பு மேற்கொண்டுவருகிறது. இதேபோல் பல்வேறு அமைப்புகள் உருவாகி செயல்பட வேண்டிய நேரமிது என்று சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Intro:Body:

matha nallinakkam

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.