மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வங்கி இணைப்பு குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்,10 வங்கிகள் இணைந்து நான்கு பொதுத் துறை வங்கிகளாக மாற்றப்படும், என அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27இலிருந்து 12ஆகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
![list of 12 public sector banks](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4291782_kk.png)
அந்த அறிவிப்பின்படி, செயல்படவுள்ள 12 பொதுத்துறை வங்கிகளின் பட்டியல் பின்வருமாறு:
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- கனரா வங்கி
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
- இந்தியன் வங்கி
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
- பேங்க் ஆஃப் பரோடா
- பேங்க் ஆஃப் இந்தியா
- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
- இந்தியன் ஓவர்சிஸ் வங்கி
- யூகோ வங்கி
- மகாராஷ்டிரா வங்கி
- பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
மேலும் விவரங்களுக்கு--> மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி இணையவுள்ள வங்கிகள்