காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் சிறுத்தை ஒன்று திடீரென ஊருக்குள் நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர், பிடிபடாமல் சிறிது நேரம் சாலையில் நடந்து சென்றது. அப்போது சிலர் சிறுத்தையின் பின்னால் நடந்து சென்றனர்.
பின்னர் மயங்கி விழுந்த சிறுத்தையை வனத் துறையினர் பிடித்த அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.