கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூகப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்திய அரசு இதனை முன்னெடுத்துள்ளது.
இதற்கிடையே யாரும் எதிர்பாராதவிதமாக, டெல்லியில் தங்கியிருந்த பிற மாநில தொழிலாளர்கள் வேலையின்றி, தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி பிகார் மாநிலத்துக்கு வரக்கூடிய பிற மாநில தொழிலாளர்கள் பெருமளவு சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிகார் மாநிலத்தின் அரசியல் முக்கியப் புள்ளியும், தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர், இந்த மாநிலத்துக்கு வரும் தொழிலாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இதற்கு காரணமான மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிதீஷ் குமாரின் நிழலாக வலம் வந்த பிரசாந்த் கிஷோர், இவ்வாறு காட்டமாகப் பதிவிட்டிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.