புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று தனது வாட்ஸ் அப்பில் கூறியிருப்பதாவது, தினமும் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என செய்தி வருகிறது. இது மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வருகிறது.
அதே நேரத்தில் ஆளுநர் அலுவலகத்தின் கடமை மாறாது ஏனெனில் அது சட்டபூர்வமான பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் நிலையற்ற தன்மை போலல்ல, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மாற்றி அமைக்கவோ அல்லது திருத்தம் செய்யப்படும் வரையோ அது மாறாது. ஆளுநர் அலுவலகம் பொதுமக்கள் பணத்தை பாதுகாத்து தேவையானவர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
அத்துடன் மக்களுக்கு பணியாற்றும் சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்ய முயற்சிக்கிறது. இது தனிப்பட்ட அக்கறை இல்லை இது மக்களுக்கான சேவை தான். இந்திய ஜனாதிபதி புதுச்சேரி மக்கள் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆளுநர் செயல்பட நிர்வாக கொள்கைகளில் நிலையாக இருக்க காரணமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உயிருள்ள புறாவை சாப்பிட்ட பெண் - சோக பின்னணி!