ETV Bharat / bharat

கேரள யானை உயிரிழந்த சம்பவம்: கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 927 பேர் மனு!

author img

By

Published : Jun 5, 2020, 5:28 AM IST

டெல்லி: கேரளாவில் வெடிமருந்து கலந்த அன்னாசிப்பழத்தை யானைக்கு கொடுத்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேன்ஜ்.ஆர்ஜ் என்னும் இணையளத்தில் 927 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Killing of pregnant tusker kerala elephant World Environment Day petitions யானை கேரளா கர்ப்பிணி யானை உயிரிழப்பு
கர்ப்பிணி யானை உயிரிழப்பு

கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியிலிருந்து கா்ப்பிணி யானை ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு வந்தது. அப்போது, சிலர் அன்னாசிப் பழத்துக்குள் வெடிப்பொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனா். அந்தப் பழத்தைச் சாப்பிடுவதற்கு முயன்றபோது, அதிலிருந்த வெடிபொருள் வெடித்ததில் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த யானை வெள்ளியாற்றில் இறங்கி தண்ணீர் குடித்து தனது எரிச்சலை போக்க முயற்சித்தது. இதனிடையே கும்கி யானைகளை வரவழைத்து அந்த யானையை உயிருடன் மீட்க வன அலுவலர்கள் முயற்சித்தனர். இருந்தபோதிலும், யானை உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல தரப்பட்ட மக்களும் யானைக்கு வெடிமருந்து கலந்த அன்னாசிப்பழத்தைக் கொடுத்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், யானை உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேன்ஜ்.ஆர்ஜ் (change.org) இணையதளத்தில் 24 மணி நேரத்திற்குள் 927 பேர் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். சுமார் 19 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.